/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் பணிக்காக தோண்டிய பள்ளம் திருக்காலிமேடில் விபத்து அபாயம்
/
குடிநீர் பணிக்காக தோண்டிய பள்ளம் திருக்காலிமேடில் விபத்து அபாயம்
குடிநீர் பணிக்காக தோண்டிய பள்ளம் திருக்காலிமேடில் விபத்து அபாயம்
குடிநீர் பணிக்காக தோண்டிய பள்ளம் திருக்காலிமேடில் விபத்து அபாயம்
ADDED : டிச 08, 2024 02:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பிராமணர் தெரு, நான்குமுனை சந்திப்பில், கடந்த 10 நாட்களுக்கு முன் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில், குழாய் உடைப்பை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்தும், பள்ளம் மூடப்படவில்லை. இதனால், இவ்வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர இயலாத நிலை உள்ளது.
மேலும், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் சிறுவர்கள், வாகன ஓட்டிகள், மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
குழாய் உடைப்பு சீரமைத்த பின், அப்பகுதியில் உள்ள வீட்டு குழாய்களில், சேற்றுநீர் கலந்த குடிநீர் வருவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, குடிநீரில் சேற்றுநீர் கலப்பதை தடுக்கவும், குழாய் உடைப்பு சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி, சாலையை முறையாக சீரமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.