/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே குறுகிய சாலையில் ஆபத்தான பயணம்
/
வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே குறுகிய சாலையில் ஆபத்தான பயணம்
வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே குறுகிய சாலையில் ஆபத்தான பயணம்
வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகே குறுகிய சாலையில் ஆபத்தான பயணம்
ADDED : ஜன 08, 2025 09:38 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்து வெள்ளேரியம்மன் கோவில், பாலாஜி நகர், கிதிரிப்பேட்டை, குப்பம், புத்தகரம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களை சேர்ந்தோர், வாலாஜாபாத் ரயில்வே பாலம் சாலையை பயன்படுத்தி ஒரகடம், பெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
கிதிரிப்பேட்டையில் இருந்து, வல்லப்பாக்கம் வழியாக வாலாஜாபாத் ரயில்வே பாலத்தை சென்றடையும் இணைப்பு சாலை பகுதி, மிகவும் மேடாகவும், குறுகியும் காணப்படுகிறது.
வாலாஜாபாத் ரயில்வே பாலம் சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அம்மாதிரியான சமயங்களில், கிதிரிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, வாலாஜாபாத் ரயில்வே பாலம் வழியாக பயணிப்போர், பாலம் அருகிலான மேடான சாலையில் வாகனங்களை நிறுத்தம் செய்ய இயலாமல் கடும் அவதிப்படுகின்றனர். இதனால், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, புத்தகரம், கிதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வாலாஜாபாத் ரயில்வே பாலம் வழியாக பயணிக்க மாற்று சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

