/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக் மீது லாரி மோதி மகள் பலி; தந்தை காயம்
/
பைக் மீது லாரி மோதி மகள் பலி; தந்தை காயம்
ADDED : மார் 20, 2024 12:15 AM
சோழவரம்:சென்னை, புழலைச் சேர்ந்தவர் தயாநிதி, 50. இவரது மகள் ஜெயபாரதி, 17; புழல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று காலை, கும்மிடிப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, தயாநிதி, மகள் ஜெயபாரதியுடன் பைக்கில் வீடு திரும்பினார்.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்துார் மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த வட மாநில லாரி, இவர்களது பைக்கில் மோதியது.
இதில் நிலைதடுமாறி விழுந்ததில், ஜெயபாரதி லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தயாநிதி பலத்த காயங்களுடன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

