/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 18, 2025 12:52 AM
காஞ்சிபுரம்:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், ஆண்டுதோறும் விளை யாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நடைபெற இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
மேலும், மண்டல அளவில் ஏழு வகையான விளையாட்டு போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டுகளும் நடைபெற உள்ளன.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள், இம்மாதம் 22ம் தேதி முதல் செப்.,12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் பங்கேற்க, நேற்று முன்தினம் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 20ம் தேதி வரை முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.