/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போட்டி தேர்வுகளுக்கு பயற்சி வகுப்பு நாளைக்குள் விண்ணப்பிக்க கெடு
/
போட்டி தேர்வுகளுக்கு பயற்சி வகுப்பு நாளைக்குள் விண்ணப்பிக்க கெடு
போட்டி தேர்வுகளுக்கு பயற்சி வகுப்பு நாளைக்குள் விண்ணப்பிக்க கெடு
போட்டி தேர்வுகளுக்கு பயற்சி வகுப்பு நாளைக்குள் விண்ணப்பிக்க கெடு
ADDED : மே 10, 2025 07:06 PM
காஞ்சிபுரம்:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அரசால் நடத்தப்படும் ரயில்வே, வங்கி, மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்ற வேலை வாய்ப்பிற்கான போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்த இலவச ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டன.
முதற்கட்டமாக தகுதி வாய்ந்த 100 பேருக்கு, சேலம் மாவட்டம், மல்லுாரிலுள்ள கொங்கு பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்று வருகிறது.
தரமான கல்வி மற்றும் வழிகாட்டுதல் ஆதரவு ஆகியவற்றை பெற முடியாத பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பயிற்சி திட்டம் கல்வி சமத்துவம் மற்றும் திறன்வள மேம்பாட்டை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு இலவச தங்கும் இட வசதி, சத்தான உணவு, திறன் பெற்ற பயிற்றுவிப்பாளர்களின் வகுப்புகள், படிப்புத் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
பயிற்சியில் பங்கேற்க பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்த தகுதியுள்ள பட்டியலின இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மே 12, 2025க்குள் https://forms.gle/
என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.