/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேரூராட்சி அலுவலக கட்டடம் மே மாதத்தில் திறக்க முடிவு
/
பேரூராட்சி அலுவலக கட்டடம் மே மாதத்தில் திறக்க முடிவு
பேரூராட்சி அலுவலக கட்டடம் மே மாதத்தில் திறக்க முடிவு
பேரூராட்சி அலுவலக கட்டடம் மே மாதத்தில் திறக்க முடிவு
ADDED : பிப் 19, 2025 01:11 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில் 37,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சி அலுவலகம், வந்தவாசி -- உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது. இக்கட்டடம் 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது.
இதன் தரைத்தளத்தில் தலைவர், செயல் அலுவலர், பொறியாளர் ஆகியோர் அறைகளும், மேல்தளத்தில் கூட்ட அரங்கும் உள்ளது. போதிய இடவசதி இல்லாமல், இடநெருக்கடியுடன் அலுவலகம் இயங்கி வருகிறது.
இதனால், அலுவலகத்திற்கு வருவோர் அமரகூட இடம் இல்லாத நிலை உள்ளது. எனவே, கூடுதலாக கட்டடம் கட்ட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதியாண்டில், மூலதன மானிய திட்டத்தின் கீழ், 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகள் நவம்பரில் துவங்கியது.
தொடர்ந்து, பேரூராட்சி அலுவலக கட்டட கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து செயல் அலுவலர் பழனிகுமார் கூறுகையில், “பேரூராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி, மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வர உள்ளது,” என்றார்.