/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சியில் சாலைகள் சேதம் ரூ.ஒரு கோடியில் சீரமைக்க முடிவு
/
மாநகராட்சியில் சாலைகள் சேதம் ரூ.ஒரு கோடியில் சீரமைக்க முடிவு
மாநகராட்சியில் சாலைகள் சேதம் ரூ.ஒரு கோடியில் சீரமைக்க முடிவு
மாநகராட்சியில் சாலைகள் சேதம் ரூ.ஒரு கோடியில் சீரமைக்க முடிவு
ADDED : ஜன 01, 2025 12:32 AM
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகள் உள்ளன. இதில், 700க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் நிலை படுமோசமான நிலையில், மேடு, பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன.
முக்கியமான தெருக்களின் நிலை பயன்படுத்த லாயக்கற்ற நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் பலர் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. தெருக்களை சீரமைக்க வேண்டும் என, பல மாதங்களாக நகரவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்திற்கு வெளியூர், வெளி மாநிலம் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால், நகரின் தெருக்கள் படுமோசமாக இருப்பதால், வெளியூர்வாசிகள் முகம்சுளித்தபடி செல்கின்றனர்.
கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக, சாலை படுமோசமாக காட்சியளித்தது. மழைக்காலம் முடிந்த பின் தெருக்கள் சீரமைக்கப்படும் என, மேயர் மகாலட்சுமி மற்றும்அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி முழுதும் 51 வார்டு களில் உள்ள சேதமான தெருக்களை சீரமைக்க, நான்கு மண்டலங்களுக்கும் தலா, 25 லட்சம் ரூபாய் என, 1 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
அதேபோல், தெருக்களில் புதைந்துள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடியை உயர்த்தி கட்டுவதற்கு, 30 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டுள்ள நிலையில், விரைவில் மாநகராட்சி முழுதும் சேதமான கான்கிரீட் மற்றும் தார்ச்சாலைகள் சீரமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

