/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சித்தாலப்பாக்கம் ஏரியை தூர்வாரி பராமரிக்க கோரிக்கை
/
சித்தாலப்பாக்கம் ஏரியை தூர்வாரி பராமரிக்க கோரிக்கை
சித்தாலப்பாக்கம் ஏரியை தூர்வாரி பராமரிக்க கோரிக்கை
சித்தாலப்பாக்கம் ஏரியை தூர்வாரி பராமரிக்க கோரிக்கை
ADDED : அக் 23, 2024 12:55 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சித்தாலப்பாக்கம் கிராமம். இப்பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலான 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனம் வாயிலாக அப்பகுதியில் 240 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன பெறுகின்றன.
சித்தாலப்பாக்கம் ஏரி, பல ஆண்டுகளாக தூர் வாராமல் உள்ளது. இதனால், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகள் தூர்ந்து மேட்டுப்பகுதியாக உள்ளது. இதனால், மழைக்காலத்தில் ஏரியில் போதுமான தண்ணீர் சேகரமாகாத நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
பருவமழை காலத்தில் சித்தாலப்பாக்கம் ஏரியில் நிரம்பும் தண்ணீரைக் கொண்டு கடந்த காலங்களில் இரு போக சாகுபடி செய்வோம். ஆனால், சில ஆண்டுகளாக ஏரி தூர்ந்து உள்ளதால், குறைந்த அளவு தண்ணீரே சேகரமாகிறது.
இதனால் நவரை பருவ சாகுபடியை அடுத்து, சொர்ணாவாரி பட்டத்திற்கு பயிரிட முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் தூர்வாரி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.