/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
/
குடிநீர் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
குடிநீர் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
குடிநீர் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஏப் 15, 2025 06:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை காலம் துவங்கியிருப்பதாக சில இடங்களில் இப்போது தண்ணீர் பிரச்னை தலை துாக்குகிறது.
கிராமப்புறங்களில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் பரவலாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டாலும் பல இடங்களில் இன்னமும் குடிநீர் பிரச்னை நிலவுகிறது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் போன்ற நகர்ப்புறங்களில், குடிநீர் வடிகால் வாரியம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால், நகரவாசிகளுக்கு குடிநீர் வழங்குகிறது.
இருப்பினும், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
கிராமங்களிலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில், குழாய்களில் சிறிய அளவிலான மோட்டார் பொருத்தி, குடிநீரை முறைகேடாக பல ஆயிரம் லிட்டர் உறிஞ்சுகின்றனர்.
காஞ்சிபுரத்திலேயே பலரது வீடுகளில் முறைகேடான மின் மோட்டார்கள் உள்ளன. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, இதுபோன்ற முறைகேடான மோட்டார்களை பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் கடந்தாண்டுகளில் எடுத்தனர்.
ஆனால், சமீப காலமாக மோட்டார் பறிமுதல் நடவடிக்கைகள் நீர்த்து போயின. தற்போதைய கோடை காலத்தில், முறைகேடான இணைப்புகள் மீது நடவடிக்கை தேவை என, கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

