/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதான குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்
/
பழுதான குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்
பழுதான குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்
பழுதான குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2025 12:37 AM

ஸ்ரீபெரும்புதுார்:வெங்காடு ஊராட்சியில் பழுதடைந்து பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாத, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வெங்காடு ஊராட்சி உள்ளது. இங்கு வீடுகளுக்கு வெங்காடு பெருமாள் கோவில் அருகில் உள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. இதனால், சில ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பி வெளியில் தெரியும் நிலையில் உள்ளது.
மேலும் நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.