/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் மின்கம்பங்கள் இடம் மாற்ற வலியுறுத்தல்
/
கால்வாயில் மின்கம்பங்கள் இடம் மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஏப் 24, 2025 01:50 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியின் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில இடங்களில், கால்வாய் அமைத்தபோது, இடையூறாக இருந்த மின்கம்பங்கள் இடம் மாற்றம் செய்யாமலே கால்வாய் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக போஜக்காரத் தெரு, வலம்புரி வினாயகர் கோவில் தெரு, தனலட்சுமி நகர் உள்ளிட்ட தெரு பகுதிகளில் கால்வாய் நடுவே மின் கம்பங்கள் காணப்படுகிறது.
இதனால், கால்வாயில் தண்ணீர் ஊடுறுவி விரைவாக மின்கம்பம் தேசம் அடைதல் மற்றும் மின்கசிவால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும், கால்வாயை பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்களில் கழிவுநீர் கால்வாய் நடுவே அமைந்துள்ள மின் கம்பங்களை இடம் மாற்றி அமைக்க மின்வாரியம் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

