/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு
ADDED : நவ 20, 2024 09:34 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லுாரிகளில், புகையிலை பயன்பாடு, புற்றுநோய், வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில் சுகாதார துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, சின்ன காஞ்சிபுரம், பச்சையப்பன் கிளை இடைநிலை பள்ளியில், இந்நிகழ்ச்சியில் புகையிலை ஆலோசகர் டாக்டர் ஸ்ரீராம், சமூகவியலாளர் கோமதி உள்ளிட்டோர் புகையிலை பயன்பாடு, புற்றுநோய், வாய் சுகாதாரம், டெங்கு, தொழுநோய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில், மாணவர்கள் புகையிலைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

