/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் மழைநீர் தேக்கத்தால் செவிலிமேடில் டெங்கு அபாயம்
/
சாலையில் மழைநீர் தேக்கத்தால் செவிலிமேடில் டெங்கு அபாயம்
சாலையில் மழைநீர் தேக்கத்தால் செவிலிமேடில் டெங்கு அபாயம்
சாலையில் மழைநீர் தேக்கத்தால் செவிலிமேடில் டெங்கு அபாயம்
ADDED : அக் 22, 2024 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு எம்பெருமான் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் முறையான வடிகால்வாய் வசதி இல்லாததால், ரேஷன் கடை எதிரில் சாலையோரம் மழைநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
இதனால், மழைநீரில்உருவாகும் 'ஏடிஸ் கொசுக்கள்' உற்பத்தியாகி, செவிலிமேடில் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளது.
எனவே, ரேஷன் கடை எதிரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், இப்பகுதியில் மழைநீர் முழுமையாக வெளியேறும் வகையில் கான்கிரீட் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.