/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை பணியால் சாலையில் பள்ளம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி
/
பாதாள சாக்கடை பணியால் சாலையில் பள்ளம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி
பாதாள சாக்கடை பணியால் சாலையில் பள்ளம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி
பாதாள சாக்கடை பணியால் சாலையில் பள்ளம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி
ADDED : டிச 18, 2025 06:29 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையில், பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு ஏரிக்கரையோரம் கைலாசநாதர் கோவில் உள்ளது. ராகு, கேது பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கான்கிரீட் தொட்டி இந்நிலையில், செவிலிமேடு கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான புது தெருவில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக மூன்று நாட்களுக்கு முன் கான்கிரீட் தொட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால், கான்கிரீட் தொட்டி அமைக்கப்பட்ட பகுதியில் நிலத்தடியில் மண் உள்வாங்கி ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று காலை இவ்வழியாக கைலாசநாதர் கோவிலுக்கு சென்ற கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டன.
இதையடுத்து அப்பகுதி மக்கள் உதவியுடன் நீண்டநேரம் போராட்டத்திற்கு பின் வாகனங்கள் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டன
சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் மாற்றாக, பள்ளம் உள்ள பகுதியில், வாகனங்கள் செல்ல தடை விதித்து தடுப்பு அமைத்துள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் இதனால், புது தெரு வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் 1 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது
எனவே, பாதாள சாக்கடை பணியால், செவிலிமேடு புது தெருவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

