/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் முருகன் கோவில் முன் வாரச்சந்தையால் பக்தர்கள் அவதி
/
உத்திரமேரூர் முருகன் கோவில் முன் வாரச்சந்தையால் பக்தர்கள் அவதி
உத்திரமேரூர் முருகன் கோவில் முன் வாரச்சந்தையால் பக்தர்கள் அவதி
உத்திரமேரூர் முருகன் கோவில் முன் வாரச்சந்தையால் பக்தர்கள் அவதி
ADDED : ஆக 04, 2025 11:38 PM

உத்திரமேரூர், உத்திரமேரூர் முருகன் கோவில் முன் வாரச்சந்தை நடத்துவதால், பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, முருகன் கோவில் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைமேடு இருந்தது. 1 ஏக்கர் பரப்பளவிலான இந்தக் சந்தைமேடில், 20 ஆண்டுக்கு முன் காவலர் குடியிருப்பு, தாசில்தார் குடியிருப்பு, மின்வாரியம், பொதுப்பணித் துறை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
இதனால், அப்பகுதியில் வாரச்சந்தை நடத்துவது கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக, பேரூராட்சி நிர்வாகம் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையில் ஞாயிற்றுக் கிழமைதோறும் மாலை 4:00 மணி முதல, 8:00 மணி வரை வாரச்சந்தை நடக்கிறது.
இங்கு, வாரச்சந்தை நடப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, முருகன் கோவிலுக்கு முன் வாரச்சந்தை நடத்தக்கூடாது என, பக்தர்கள் தரப்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
உத்திரமேரூர் முருகன் கோவிலுக்கு முன் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. இதனால், கோவிலுக்கு வரும்போது அங்குள்ள கடைகளால் இடையூறு ஏற்படுகிறது.
கோவிலுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லாமல் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.