/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அவளூர் சிங்கேஸ்வரர் கோவிலை புரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
/
அவளூர் சிங்கேஸ்வரர் கோவிலை புரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
அவளூர் சிங்கேஸ்வரர் கோவிலை புரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
அவளூர் சிங்கேஸ்வரர் கோவிலை புரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 13, 2025 12:45 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்து, பாலாற்றங்கரையையொட்டி அவளூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான காமாட்சி அம்மன் உடனுறை சிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
பழமைவாய்ந்த இக்கோவில், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் சிறந்த வழிபாட்டு தளமாக விளங்குகிறது.
இக்கோவிலில் காலை, மாலை நேரங்களில், பூஜைகள் மற்றும் மாதந்தோறும் சனி பிரேதாஷம், அன்னதானம் போன்றவை அப்பகுதிவாசிகள் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இக்கோவிலின் கோபுர பகுதியை சுற்றி உள்ள சுவாமி உருவச் சிலைகள் சிதிலம் அடைந்து, சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து, பலவீனம் அடைந்து வருகின்றன.
எனவே, பழமைவாய்ந்த இக்கோவிலை, தொன்மை மாறாமல் புனரமைத்து, வழிபாட்டிற்கு விட, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.