/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தர்மேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
/
தர்மேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
ADDED : பிப் 15, 2024 12:19 AM
குன்றத்துார்:மணிமங்கலத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான தர்மேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் சிவன் சன்னிதி, அம்மாள் சன்னிதிகள் தனித்தனி கோவில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளன.
ஆகம விதிப்படி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து தொல்லியல் துறை சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில், தர்மேஸ்லவரர் கோவில் புனரமைப்பு பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடைந்தன.
தொல்லியல் துறையினர்- மற்றும் அறநிலையத்துறையினர் இடையே ஒத்துழைப்பு இல்லாததால் புனரமைப்பு பணி முடிந்து, ஐந்து ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இம்மாதம் 21ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொல்லியல் மற்றும் ஹிந்து அறநிலையத்துறையினர், கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.

