ADDED : ஏப் 17, 2025 07:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நீரழிவு மன்றத்தின் 100வது மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, நீரிழிவு நோய் சிறப்பு டாக்டர் வெங்கட்ராமன், ‛நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை பயணம்' என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார்.
காஞ்சிபுரம் நீரழிவு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்புசெல்வன் வரவேற்றார். 'பெண்களும், நீரிழிவு நோயும்' என்ற தலைப்பில் டாக்டர் மாணிக்கவாசகம் பேசினார்.
டாக்டர் தன்யகுமார் நன்றி கூறினார். முன்னதாக பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நீரிழிவு நோய் தொடர்பான புதிய மருந்துகளின் வரவுகள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காரணங்கள் குறித்து 75க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உரையாற்றினர்.