/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்
/
கால்நடை மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்
கால்நடை மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்
கால்நடை மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்
ADDED : ஜூலை 05, 2025 10:24 PM
காஞ்சிபுரம்:கம்மவார்பாளையத்தில் கால்நடை மருத்துவர் இல்லாததால் ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கால்நடை மருத்துவமனை கோவிந்தவாடி கிராம பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் தங்கள் ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு கால்நடை உதவி மருத்துவர், கடந்த மாதம் மருத்துவர்களின் கலந்தாய்வில் தாமல் மருத்துவமனைக்கு இடமாறுதல் பெற்று சென்று விட்டார். அவருக்கு பதிலாக புதிய மருத்துவரை, கால்நடை துறை நிர்வாகம் யாரையும் நியமிக்கவில்லை.
இதனால், ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது என, ஆடு, மாடு வளர்ப்போர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கம்மவார்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு, மருத்துவரை நியமிக்க, சம்பந்தப்பட்ட கால்நடை துறையினர் முன் வரவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.