/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஸ்கட்டுக்கு நேரடி விமானம் சேவை பிப்ரவரியில் துவக்கம்
/
மஸ்கட்டுக்கு நேரடி விமானம் சேவை பிப்ரவரியில் துவக்கம்
மஸ்கட்டுக்கு நேரடி விமானம் சேவை பிப்ரவரியில் துவக்கம்
மஸ்கட்டுக்கு நேரடி விமானம் சேவை பிப்ரவரியில் துவக்கம்
ADDED : ஜன 07, 2025 07:40 AM
சென்னை : சென்னையில் இருந்து மஸ்கட் இடையேயான நேரடி விமான சேவையை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் பிப்ரவரியில் துவங்க உள்ளது. ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு, சென்னையில் இருந்து வாராந்திர அடிப்படையில் இண்டிகோ, ஓமன் ஏர், சலாம் ஏர், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள், விமான சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், வரும் பிப்., 4ம் தேதியில் இருந்து, சென்னை - மஸ்கட் இடையேயான நேரடி விமான சேவையை துவங்க உள்ளது. வாரத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்படும் விமானம், அந்நாட்டு நேரப்படி மாலை 4:10மணிக்கு மஸ்கட் சென்றடையும்.
மஸ்கட்டில் இருந்து, அந்நாட்டு நேரப்படி மாலை 5:10 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10:40 மணிக்கு சென்னை வந்தடையும்.