/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழிகாட்டி பலகை மறைப்பு திசைமாறும் வாகன ஓட்டிகள்
/
வழிகாட்டி பலகை மறைப்பு திசைமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 17, 2024 11:29 PM

ஆற்பாக்கம், உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் பயணிக்கும், வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, ஆற்பாக்கம் கூட்டு சாலையில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இதில், நெடுஞ்சாலை துறை சார்பில் சுருட்டல், மாமண்டூர் ஊர்களுக்கு எந்த திசையில் செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலையோரம் உள்ள சீமைகருவேல மரத்தின் கிளைகள் வழிகாட்டி பெயர் பலகையை மறைத்துள்ளதால், உத்திரமேரூரில் இருந்து, சுருட்டல், மாமண்டூருக்கு செல்ல வேண்டிய வெளியூர் வாகன ஓட்டிகள், வழி தவறி மாற்று திசையில் பிற ஊருக்கு செல்லும் நிலை உள்ளது.
வழிகாட்டி பெயர் பலகை இருந்தும், வாகன ஓட்டிகளுக்கு பயன் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே, வழிகாட்டி பலகையை மறைக்கும் சாலையோர சீமைகருவேல மரக்கிளையை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.