ADDED : செப் 29, 2025 12:27 AM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், நாட்டரசன்பட்டில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 2வது மாநாடு நேற்று நடை பெற்றது.
குன்றத்துார் ஒன்றிய தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில், குன்றத்துார் ஒன்றிய தலைவராக அண்ணாதுரை மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார். ஒன்றிய செயலராக ராமு, பொருளாளராக முருகன், துணைத் தலைவர்கள், துணை செயலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் என, 16 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
அதை தொடர்ந்து, விண்ணப்பித்து காத்திருக்கும், 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
பிற மாநிலங்களை போல, மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழக்க வேண்டும்.
வீடில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 100 நாள் வேலையை, 150 நாளாக உயர்த்தி, எட்டு மணி நேர பணியை, நான்கு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் 150 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.