/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
/
ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ADDED : ஜன 22, 2025 01:02 AM

ஸ்ரீபெரும்புதுார்:தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், ஸ்ரீபெரும்புதார் வட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலையில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் வட்ட தலைவர் அர்ஜுன் தலைமையில் நடந்த போராட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் வழங்குவது போல், உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பணித்தளத்தில் எட்டு மணி நேரம் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை ரத்து செய்து, பழைய நிலையை தொடர வேண்டும்.
அனைத்து உதவித்தொகையும் மாற்றுத்திறனாளிகள் துறை வாயிலாக வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கும் ஏ.ஒய்.ஒய்., குடும்ப அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து விடுவித்தனர்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் வட்டார கிளை சார்பில், மாவட்ட செயலர் முனுசாமி தலைமையில், உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை, உத்திரமேரூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து விடுவித்தனர்.