/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் தாமதமாக புறப்படும் ரயில் அதிருப்தியடைந்த பயணியர் மறியல்
/
காஞ்சியில் தாமதமாக புறப்படும் ரயில் அதிருப்தியடைந்த பயணியர் மறியல்
காஞ்சியில் தாமதமாக புறப்படும் ரயில் அதிருப்தியடைந்த பயணியர் மறியல்
காஞ்சியில் தாமதமாக புறப்படும் ரயில் அதிருப்தியடைந்த பயணியர் மறியல்
ADDED : மார் 05, 2024 11:54 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு, அதிகாலை 5:30 மணிக்கும், அதைத் தொடர்ந்து, 6:15, 7:20, 8:05 என தொடர்ந்து பல்வேறு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இருப்பினும், காலை 6:15க்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில், காஞ்சிபுரத்திலிருந்து, அன்றாடம் அரை மணி நேரம் தாமதமாக புறப்படுவதாக பயணியர் ஏற்கனவே புகார் தெரிவித்து வந்தனர்.
திருமால்பூரிலிருந்து வரும் இந்த ரயில், காஞ்சிபுரத்தில் நிறுத்தப்பட்டு, பின்னால் வந்த சரக்கு ரயில் போன்றவைக்கு அரை மணி நேரம் வரை காத்திருப்பதாக பயணியர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ரயில் பயணியர் 50க்கும் மேற்பட்டோர், அதிருப்தியடைந்து, புதிய ரயில் நிலையத்தில், நேற்று, காலை 6:30 மணிக்கு ரயில் மறியல் செய்தனர்.
ரயில்வே போலீசார், உள்ளூர் போலீசார், ரயில் ஊழியர்கள் என பல தரப்பினரும் பயணியரிடம்சமாதானம் செய்தனர். அரை மணி நேரம் வரை இப்போராட்டம் நீடித்துள்ளது.
பயணியரை ரயில்வே துறை ஊழியர்கள், சமாதானம் செய்த பின், அரை மணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டு சென்றது.