/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஸ் ஸ்டாப்பை மறைக்கும் விளம்பர பேனர்களால் இடையூறு
/
பஸ் ஸ்டாப்பை மறைக்கும் விளம்பர பேனர்களால் இடையூறு
ADDED : மே 24, 2025 11:03 PM

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலை, பெருநகர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, காஞ்சிபுரம், வந்தவாசி, உத்திரமேரூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன. இந்த பயணியர் நிழற்குடை முன் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களால் பேருந்துக்காக வரும் பயணியருக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
நிழற்குடையில் அமர்ந்துள்ள பயணியருக்கு பேருந்து வருவது தெரியாத நிலை உள்ளது. பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள, விளம்பர பேனர்களை அகற்ற தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, பெருநகர் பயணியர் நிழற்குடை முன் வைக்கப்பட்டுள்ள, விளம்பர பேனர்களை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.