/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விரிவாக்கம் செய்தபோது அகற்றாத கை பம்ப்பால் இடையூறு
/
சாலை விரிவாக்கம் செய்தபோது அகற்றாத கை பம்ப்பால் இடையூறு
சாலை விரிவாக்கம் செய்தபோது அகற்றாத கை பம்ப்பால் இடையூறு
சாலை விரிவாக்கம் செய்தபோது அகற்றாத கை பம்ப்பால் இடையூறு
ADDED : ஜூலை 14, 2025 11:48 PM

உத்திரமேரூர், உத்திரமேரூரில், -வடக்கு ரெட்டி சாலை விரிவாக்கம் செய்தபோது, அகற்றாத கை பம்ப்பால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, வடக்கு ரெட்டி தெருவில், கைப்பம்ப் குழாய் உள்ளது. இந்த கைப்பம்ப் குழாய், 30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி, அப்பகுதிவாசிகள் குடிநீர் பெற்று வந்தனர்.
சில ஆண்டுக்கு முன், போர்வெல்லில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கைப்பம்ப் குழாய் பயன்பாட்டை பொதுமக்கள் கைவிட்டனர்.
கடந்த 2023ல், வடக்கு ரெட்டி தெரு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெருவில் இருந்த கைப்பம்ப் குழாயை அகற்றாமல் விட்டுள்ளனர்.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கைப்பம்ப் குழாய் மீது மோதி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களில், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள கைப்பம்ப் குழாயை அகற்ற, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.