/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரும்புலியூர் வைகுண்டவாஸ கோவில் கும்பாபிஷேகம்
/
அரும்புலியூர் வைகுண்டவாஸ கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 14, 2025 11:48 PM

அரும்புலியூர், அரும்புலியூர், வைகுண்டவாஸ பெருமாள் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று, மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான வைகுண்டவாஸ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கடந்த 2006ல் கும்பாபிஷேக விழா நடந்தது. இதனிடயே, கோவில் கட்டடத்தின் சில பகுதிகள் சிதிலம் அடைந்தும், சுவரின் சில இடங்களில் கான்கிரீட் பெயர்ந்தும் உள்ளன.
இதனால், கோவிலில் புனரமைப்பு பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர்.
அதன்படி, சில மாதங்களாக கோவிலில் புதிய மண்டபம் கட்டுதல், பழுதான கட்டடம் சீர் செய்தல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணி முழுமை பெற்றதையடுத்து 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று, மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது.
விழாவையொட்டி, மூன்று நாட்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், அரும்புலியூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.