/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு
/
பழையசீவரம் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு
பழையசீவரம் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு
பழையசீவரம் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு
ADDED : ஜூலை 14, 2025 11:48 PM
வாலாஜாபாத் பழையசீவரத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சியில், பழையசீவரம், சங்கராபுரம், லிங்காபுரம், வரதாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. இந்த ஊராட்சியில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது.
இக்கட்டடம் மிகவும் பழுதானதையடுத்து மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் நீர் சொட்டும் நிலை ஏற்பட்டது. இதனால், புதிய கட்டடம் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பழையசீவரத்தில் புதியதாக ஊராட்சி அலுவலகம் கட்ட 2024 - 25ம் ஆண்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் ஊராட்சி கனிமவள நிதியின் கீழ், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் முழுமை பெற்றதையடுத்து நேற்று திறப்பு விழா நடந்தது.
அப்பகுதி ஊராட்சி தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் பங்கேற்று கட்டடத்தை திறந்து வைத்தனர்.
வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவலர் சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.