/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்மோர், எலுமிச்சை பழச்சாறு ஆதரவற்றோருக்கு வழங்கல்
/
நீர்மோர், எலுமிச்சை பழச்சாறு ஆதரவற்றோருக்கு வழங்கல்
நீர்மோர், எலுமிச்சை பழச்சாறு ஆதரவற்றோருக்கு வழங்கல்
நீர்மோர், எலுமிச்சை பழச்சாறு ஆதரவற்றோருக்கு வழங்கல்
ADDED : ஏப் 15, 2025 06:29 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை சேர்ந்த டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் தன்னார்வ அமைப்பினர், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் முதியோரை தேடிச்சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கோடை காலம் துவங்கி காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோடை காலம் முடியும் வரை சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் முதியோரை தேடிச்சென்று நீர்மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி ஆதரவற்றோருக்கு நேற்று நீர்மோர் வழங்கினர். சின்ன காஞ்சிபுரம், பேருந்து நிலையம், காமராஜர் வீதி, ராஜ வீதிகளில் ஆதரவற்றோர் மற்றும் முதியோரை தேடிச்சென்று நீர்மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கினர்.