/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெருக்களில் கால்நடைகளை கட்டுவதால் இடையூறு
/
தெருக்களில் கால்நடைகளை கட்டுவதால் இடையூறு
ADDED : அக் 15, 2024 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில், பஜனை கோவில் தெரு, துர்க்கை அம்மன் கோவில் தெரு, கலைஞர் தொகுப்பு தெரு மற்றும் அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை பராமரிப்போர் அதிகம் உள்ளனர்.
இவர்கள், மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு திரும்பும் தங்களது கால்நடைகளை, கொட்டகைக்கு பதிலாக தங்களது வீடுகளின் எதிரே உள்ள தெரு பகுதிகளில் கட்டி பாதுகாக்கின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, பொது இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, கால்நடைகளை தெருக்களில் கட்டுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ. பாலசுப்பிரமணியம், பழையசீவரம்.