/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டிவிஷன் கிரிக்கெட் தெற்கு ரயில்வே வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட் தெற்கு ரயில்வே வெற்றி
ADDED : செப் 29, 2025 11:50 PM
சென்னை;டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், நுங்கம்பாக்கம் சி.சி., அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தெற்கு ரயில்வே வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்களுக்கான மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
இதில், சித்தாலப்பாக்கத்தில் உள்ள ஜோன்ஸ் கிரிஷ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், நுங்கம்பாக்கம் கிரிக்கெட் கிளப் அணி, தெற்கு ரயில்வே அணியை எதிர்த்து விளையாடியது.
டாஸ் வென்ற தெற்கு ரயில்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து முதலில் பேட் செய்த நுங்கம்பாக்கம் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 20.1 ஓவரில் 84 ரன்களில் ஆட்டமிழந்தது. தெற்கு ரயில்வே அணி சார்பில் தியாகு 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார், காளீஸ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய தெற்கு ரயில்வே அணியினர், நிதானமான ஆட்டத்தை வெளிப் படுத்த அந்த அணி, 23.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணி வீரர்கள் நிர்மல்ராஜ், 43 ரன்கள், அஜய்குமார், 20 ரன்கள் எடுத்தனர்.