/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தீபாவளிக்கு பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,500; மல்லி 1,200
/
தீபாவளிக்கு பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,500; மல்லி 1,200
தீபாவளிக்கு பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,500; மல்லி 1,200
தீபாவளிக்கு பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,500; மல்லி 1,200
ADDED : அக் 30, 2024 09:01 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி மற்றும் கேதார கவுரி நோன்பையொட்டி பூஜைக்கு தேவையான பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில், நேற்று, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம், பூக்கடைசத்திரம் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை பூக்கடை உரிமையாளர் பாஸ்கர் கூறியதாவது:
தீபாவளி, வெள்ளிக்கிழமை, கேதார கவுரி நோன்பையொட்டி தமிழகம் முழுதும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும், தேவைக்கேற்ப பூக்களின் வரத்து இல்லாததால், விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதன்படி, கடந்த வாரம் கிலோ 200க்கு விற்ற மல்லிகைப்பூ, நேற்று, 1,200 ரூபாய்க்கும், 100க்கு விற்ற முல்லை 700 ரூபாய்க்கும், 100க்கு விற்ற பன்னீர் ரோஜா 200 ரூபாய்க்கும், 500க்கு விற்ற கனகாம்பரம் 1,500 ரூபாய்க்கும், 70க்கு விற்ற சம்பங்கி 100 ரூபாய்க்கும், 300க்கு விற்ற ஜாதிமல்லி 500 ரூபாய்க்கும், 100க்கு விற்ற மீரா பால் ரோஜா, 250 ரூபாய்க்கும், 50க்கு விற்ற சாமந்தி 200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.