/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மளிகை கடை நடத்திவரும் பீஹார் குடும்பத்திற்கு தி.மு.க., நகர துணை செயலர் கொலை மிரட்டல்
/
மளிகை கடை நடத்திவரும் பீஹார் குடும்பத்திற்கு தி.மு.க., நகர துணை செயலர் கொலை மிரட்டல்
மளிகை கடை நடத்திவரும் பீஹார் குடும்பத்திற்கு தி.மு.க., நகர துணை செயலர் கொலை மிரட்டல்
மளிகை கடை நடத்திவரும் பீஹார் குடும்பத்திற்கு தி.மு.க., நகர துணை செயலர் கொலை மிரட்டல்
ADDED : ஜன 01, 2026 05:10 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் மளிகை கடை நடத்தி வரும், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினரை, ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., நகர துணை செயலர் தகாத வார்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவர், வடமாநில மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷியாம்பிஷாரி சிங், 52; இவர், 15 ஆண்டுகளாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுங்சாலையோரம், ஸ்ரீபெரும்புதுார் சோதனைச்சாவடி சந்திப்பு அருகே, கணேஷ் ஸ்டோர் என்ற பெயரில், மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 28ம் தேதி காலை, கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., நகர துணை செயலர் ஆறுமுகம் என்பவர், கடைக்கு வந்து எண்ணெய் வேண்டும் என்று கூறி, 500 ரூபாய் பணம் கொடுத்தார்.
கடையில் போதிய சில்லரை இல்லாததால், கடையின் உரிமையாளர் ஷியாம்பிஷாரி சிங், அவரிடம் சில்லரை இல்லை என்று தொரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க., நிர்வாகி ஆறுமுகம், கடை உரிமையாளரை ஒருமையில் பேசியதுடன், கொச்சையான வார்த்தைகளில் பேசினார். அத்துடன், கடையில் உடன் இருந்த ஷியாம்பிஷாரின் மகன் கணேஷ்குமாரை தள்ளிவிட்டு, கடையை மூடி குடும்பத்துடன் காலி செய்து விடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது, குறித்து கணேஷ்குமார், ஸ்ரீபெரும்புதுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மளிகை கடை நடத்திவரும் பீஹார் குடும்பத்தினரை, தி.மு.க., நகர துணை தலைவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், அப்பகுதி வசித்து வரும் வடமாநில குடும்பத்தினர் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

