/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜன.,4, 5ல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: காஞ்சி கலெக்டர் கலைச்செல்வி தகவல்
/
ஜன.,4, 5ல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: காஞ்சி கலெக்டர் கலைச்செல்வி தகவல்
ஜன.,4, 5ல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: காஞ்சி கலெக்டர் கலைச்செல்வி தகவல்
ஜன.,4, 5ல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: காஞ்சி கலெக்டர் கலைச்செல்வி தகவல்
ADDED : ஜன 01, 2026 04:57 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள், ஜன.,4, 5ம் தேதிகளில் வழங்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, கூட்டுறவு துறை சார்பில், வீடுகளுக்கே நேரில் சென்று அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை, தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயனாளிகள், 20,000 பேர், இத்திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர்.
வீடுகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணி ஒவ்வொரு மாதத்தின் முதல் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் நடைமுறைபடுத்த ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

