/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லு குளத்தை சீரமைக்க கோரி தி.மு.க., கவுன்சிலர் கலெக்டரிடம் மனு
/
கல்லு குளத்தை சீரமைக்க கோரி தி.மு.க., கவுன்சிலர் கலெக்டரிடம் மனு
கல்லு குளத்தை சீரமைக்க கோரி தி.மு.க., கவுன்சிலர் கலெக்டரிடம் மனு
கல்லு குளத்தை சீரமைக்க கோரி தி.மு.க., கவுன்சிலர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 19, 2025 12:56 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரத்தில், கல்லு குளத்தை துார்வாரி, படிகளை சீரமைத்து தருமாறும் மற்றும் சீரமைத்தல் பணிக்கு அரசிடம் நிதி பெற்று தர கோரி, காஞ்சிபுரம் மாநகராட்சி 29வது வார்டு, தி.மு.க.,- -- கவுன்சிலர் குமரன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.
மனு விபரம்:
சின்ன காஞ்சிபுரம் வார்டு எண் 29ல், வேகவதி தெரு முடியுமிடத்தில், தொன்மை வாய்ந்த நீர்நிலை ஆதாரமாக விளங்கக்கூடிய கல்லு குளம் உள்ளது. தற்போது இக்குளம் முற்றிலும் சேதமடைந்து நீர்வற்றி, குளம் முழுதும் செடிகளாக காட்சியளிக்கிறது.
இக்குளத்து அருகில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் உள்ள தெருக்களில் இருந்து வரும் மழைநீர், இக்குளத்திற்கு வருகிறது. இதன் அருகில் வேகவதி ஆறு செல்கிறது.
இக்குளமானது மழைநீர் சேகரிப்பு மையமாகவே இப்பகுதியில் விளங்குகிறது. எனவே, இக்குளத்தை துார்வாரி, குளத்தின் படிகளை சீரமைத்து, பொதுமக்கள் பயன்படுத்தும்படி குளத்தை சுற்றி நடைபாதையை அமைத்து, புனரமைத்து தருமாறும், இப்பணிக்கு அரசிடமிடம் இருந்து உரிய நிதியை பெற்று தருவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.