ADDED : மார் 14, 2024 02:00 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்,:கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் பற்றி, பா.ஜ.,வைச் சேர்ந்த தேசிய மகளிர் கமிஷன் உறுப்பினரான குஷ்பு தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
இதனால், தி.மு.க.,வின் மகளிர் அணியினர், குஷ்புவை கண்டித்தும், அவரது உருவ படத்தை அவமதிப்பு செய்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் தி.மு.க., மகளிர் அணி சார்பில், மேற்கு ராஜவீதியில், நிர்வாகிகள் பலரும், குஷ்புவின் உருவ படத்தை அவமதிப்பு செய்தும், அவரை கண்டித்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குஷ்புவின் புகைப்படத்தை தீ வைத்து எரிக்க முயன்றபோது, போலீசார் தடுத்தனர். இதில், மகளிர் அணி நிர்வாகிகள், மேயர் மகாலட்சுமிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.
