ADDED : ஜன 07, 2025 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை மற்றும் எம்.ஜி.எம்., கேன்சர் சென்டர் சார்பில், மருத்துவர்களுக்கான கருத்தரங்கம், சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், டாக்டர் சையத் இஸ்மாயில் மூளை புற்றுநோய் குறித்தும், டாக்டர் கோபிநாதன் ஸ்டெம் செல் சிகிச்சை குறித்தும் உரையாற்றினர்.  பொருளாளர் டாக்டர் ஞானவேல், முன்னாள் தலைவர்கள் டாக்டர்கள் மனோகரன், விக்டோரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

