/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண்காணிப்பு குழு கூட்டத்தில் டி.ஆர்.பாலு கண்டிப்பு
/
கண்காணிப்பு குழு கூட்டத்தில் டி.ஆர்.பாலு கண்டிப்பு
கண்காணிப்பு குழு கூட்டத்தில் டி.ஆர்.பாலு கண்டிப்பு
கண்காணிப்பு குழு கூட்டத்தில் டி.ஆர்.பாலு கண்டிப்பு
ADDED : மார் 08, 2024 11:46 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில், மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடு மற்றும் முன்னேற்ற நிலை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் பங்கேற்பு
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின், கண்காணிப்பு குழுவின் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி.,யுமான டி.ஆர்.பாலு தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம்தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன், எஸ்.பி., சண்முகம், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், வேளாண், தோட்டக்கலை, மக்கள் நல்வாழ்வு, கல்வி, வருவாய், மின்சாரம், நெடுஞ்சாலை, மீன்வளம் உள்ளிட்ட துறையிலும் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டங்களின் நிலை குறித்து எம்.பி., டி.ஆர்.பாலு கேட்டறிந்தார்.
அப்போது, வேளாண் துறை, பால்வளம், வருவாய் துறை, தோட்டக்கலை உள்ளிட்ட துறையின் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தியில்லை எனக்கூறி, அதிகாரிகளை டி.ஆர்.பாலு கடிந்து கொண்டார்.
கலக்கம்
மேலும், அதிகாரிகளின் செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்.
அதிகாரிகளை கேள்வி கேட்டு கடிந்து கொண்டதால், பிற துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலக்கமடைந்து அமர்ந்திருந்தனர்.

