/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டி.ஆர்.ஏ., டேஷர்ஸ் அணி 'கிக் பாக்சிங்'கில் அபாரம்
/
டி.ஆர்.ஏ., டேஷர்ஸ் அணி 'கிக் பாக்சிங்'கில் அபாரம்
ADDED : அக் 27, 2025 11:47 PM

சென்னை: சென்னையில் நடந்த 'கிக் பாக்சிங் பிரீமியர் லீக்' போட்டியில், டி.ஆர்.ஏ., டேஷர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கம் மற்றும் ஸ்போர்டோராமா நிறுவனம் இணைந்து மாநில அளவில் 'கிக் பாக்சிங் பிரீமியர் லீக்' போட்டியின் முதல் சீசன், சென்னையின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு பாக்சிங் அரங்கில் நடந்தது. போட்டி நாக்-அவுட் முறையில் நடந்தது.
தகுதிச்சுற்று முடிவில் டி.ஆர்.ஏ., டேஷர்ஸ், சேலம் சூப்பர் ஸ்டார்ஸ், சென்னை டைட்டன்ஸ், திருச்சி டி.எஸ்.யு., வீரன்ஸ் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. அரையிறுதி போட்டியில் டி.ஆர்.ஏ. டேஷர்ஸ், சேலம் சூப்பர் ஸ்டார்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதி போட்டிகள் நேற்று நிறைவு பெற்றது. 12 பிரிவில் நடந்த இந்த போட்டியில் டி.ஆர்.ஏ., டேஷர்ஸ் அணி ஏழு பிரிவில் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சேலம் அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது.

