/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் பணிகள் அரைகுறை நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
/
வடிகால்வாய் பணிகள் அரைகுறை நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
வடிகால்வாய் பணிகள் அரைகுறை நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
வடிகால்வாய் பணிகள் அரைகுறை நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
ADDED : டிச 11, 2024 12:17 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- செங்கல்பட்டு நெடுஞ்சாலை, கடந்த 2022ல், 54 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
இச்சாலை வழியாக, 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், வந்தவாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
தற்போது, உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெறாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், மழைநீர் வடிகால்வாய் கட்டாமல் விட்ட இடத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து, அருகிலுள்ள நிலத்தில் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
எனவே, அரைகுறையாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய், பணியை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.