/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் நீர்த்தேக்க கிணறு ரூ.11.70 லட்சத்தில் அமைப்பு
/
குடிநீர் நீர்த்தேக்க கிணறு ரூ.11.70 லட்சத்தில் அமைப்பு
குடிநீர் நீர்த்தேக்க கிணறு ரூ.11.70 லட்சத்தில் அமைப்பு
குடிநீர் நீர்த்தேக்க கிணறு ரூ.11.70 லட்சத்தில் அமைப்பு
ADDED : ஏப் 11, 2025 01:09 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சியில், அருந்ததிபாளையம், மேல் சித்தமல்லி, நாகமேடு, கொருக்கந்தாங்கல் உள்ளிட்ட துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசை குழாய்கள் ஆகியவை வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வெங்கச்சேரி, செய்யாற்றில் இருந்து, 9 கி.மீ., துாரத்திற்கு பைப்லைன் வாயிலாகவும் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரும்போது பைப்லைன் அடிக்கடி உடைந்து, குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டு வந்தது.
இதை தவிர்க்க, அப்பகுதிவாசிகள் குடிநீர் நீர்த்தேக்க கிணறு அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 11.70 லட்சம் செலவில், திருப்புலிவனம் பகுதியில் புதிய குடிநீர் நீர்த்தேக்க கிணறு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட குடிநீர் நீர்த்தேக்க கிணறு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

