/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒழுக்கோல்பட்டு காலனியில் குடிநீர் தட்டுப்பாடு
/
ஒழுக்கோல்பட்டு காலனியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஏப் 06, 2025 07:28 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஒழுக்கோல்பட்டு ஊராட்சியில், ஒழுக்கோல்பட்டு காலனி துணை கிராமம் உள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடிநீர் வினியோகம் அரை மணி நேரம் கூட வரவில்லை என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாரியம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் சரியாக இருப்பதில்லை என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஒழுக்கோல்பட்டு கிராமத்தினர் கூறியதாவது:
வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கொடுத்தனர். 10 ஆண்டுகளில் வீடுகளின் எண்ணிக்கை கூடி உள்ளது.
அதற்கு ஏற்ப தண்ணீர் கட்டமைப்பு ஏற்படுத்தி கொடுத்த வேண்டும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்யாததால், கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒரு மணி நேரம் கூட குடிநீர் வினியோகம் இல்லை என்பதே வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

