ADDED : மே 08, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யாறு:காஞ்சிபுரம் மாவட்டம் மேல் கதிர்பூரை சேர்ந்தவர் டிரைவர் ஆறுமுகம், 40, திருமணமாகாதவர். நேற்று இவர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தாலிக்கால் கிராமத்தில் வசிக்கும் அவரது தங்கை, அகிலாவை பார்க்க வந்தார்.
அப்போது அருகில் உள்ள கிணற்றில், மதுபோதையில் குளித்தபோது பலியானார். அவ்வழியாக சென்றவர்கள் ஆறுமுகம் சடலமாக கிணற்றில் மிதப்பதை பார்த்து, உறவினர்களுக்கு தகவல் கூறினர். கிராம மக்கள் ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டனர். துாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.