/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நின்ற லாரி மீது வேன் மோதி ஓட்டுநர் பலி
/
நின்ற லாரி மீது வேன் மோதி ஓட்டுநர் பலி
ADDED : மே 30, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பரத், 27. டாடா ஏஸ் வேன் ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, டாடா ஏஸ் வேனை ஓட்டிக்கொண்டு குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் சென்றார்.
குன்றத்துார் அருகே சிறுகளத்துாரை கடந்தபோது, சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது, டாடா ஏஸ் வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேன் ஓட்டுநர் பரத் பலத்த காயங்களுடன், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிற்றி நேற்று காலை பரத் இறந்தார்.
விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.