ADDED : டிச 25, 2025 05:47 AM
காஞ்சிபுரம்: செஞ்சிலுவை இளைஞர் சங்கம் சார்பில், காஞ்சி புரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் செஞ்சிலுவை சங்க தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் வெங்டேசன் பேசுகையில், ''போதை மாத்திரையால் ஏற்படும் உடல் பாதிப்பு, சமூக சிக்கல்கள் அதிகம். இதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
''பிரச்னைகள் வரும்போது பெற்றோரிடமும், பேராசிரியர்களிடமும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால், தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம்,'' என்றார்.
கல்லுாரி முதல்வர் கோமதி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர், போதை எதிர்ப்பு மற்றும் தற்கொலை தவிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி நன்றி கூறினார்.

