/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான்
/
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : டிச 29, 2024 08:35 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி விளையாட்டு துறையினர் இணைந்து, போதை இல்லா தமிழகத்தை வலியுறுத்தி, நேற்று மாநில அளவிலான போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம், பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டி, காந்திரோடு, சின்னகாஞ்சிபுரம் வழியாக பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நிறைவடைந்தது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கல்லுாரி மாணவ - -மாணவியர் பங்கேற்றனர்.
போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு, காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ ., எழிலரசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

