/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதையில் மயங்கி விழுந்த கொத்தனார் பலி
/
போதையில் மயங்கி விழுந்த கொத்தனார் பலி
ADDED : பிப் 07, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த, கூத்தவாக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50, கொத்தனார். இவரது மனைவி சலின், 45.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன், வீட்டில் மயங்கி விழுந்தார். அப்போது, மனைவி சலின், அவரின் சட்டையை சோதித்ததில், அரளி விதை இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நேற்று காலை, அவர் பலியானார்.

