/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரட்டை ரயில் பாதை இல்லாததால் அன்றாடம் பயணியர் அவதி பாலுாரில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்
/
இரட்டை ரயில் பாதை இல்லாததால் அன்றாடம் பயணியர் அவதி பாலுாரில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்
இரட்டை ரயில் பாதை இல்லாததால் அன்றாடம் பயணியர் அவதி பாலுாரில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்
இரட்டை ரயில் பாதை இல்லாததால் அன்றாடம் பயணியர் அவதி பாலுாரில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்
ADDED : பிப் 22, 2024 11:38 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு பணி நிமித்தமாகவும், சொந்த வேலை, வியாபாரம், சிகிச்சைக்காக அன்றாடம் பலர் சென்று வருகின்றனர்.
அவ்வாறு, செல்லும் பயணியர், அன்றாடம் சந்திக்கும் பிரச்னையாக, வாலாஜாபாத் அல்லது பாலுார் ரயில் நிலையங்களில், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.
அதாவது, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையேயான ரயில் பாதை ஒன்று மட்டுமே இருப்பதால், வாலாஜாபாத் அல்லது பாலுார் ஆகிய ரயில் நிலையங்களில் எதிரே வரும் ரயிலுக்காக மற்றொரு ரயில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து 3:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், காஞ்சிபுரம் நோக்கி வரும்போது, பாலுாரில் 5:30 மணிக்கு நிறுத்தப்பட்டு எதிரே வரும் ரயிலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
அதேபோல, புதுச்சேரியில் இருந்து, திருப்பதி செல்லும் மெமோ ரயில் - மின்சாரத்தை பயன்படுத்தி குறுகிய மற்றும் நடுத்தர தொலைவிற்கு இயங்கக்கூடிய ரயில், செங்கல்பட்டில் மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு, 6:30க்கு பாலுாரில் நிறுத்தப்பட்டு காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் காலை 8:00 மணிக்கு நிறுத்தப்பட்டு எதிரே வரும் ரயிலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அதிகபட்சமாக, 45 நிமிடம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இரட்டை ரயில் பாதை இல்லாததால், காஞ்சிபுரம், பாலுார் நிலையங்களில், மணிக்கணக்கில், ரயில் நிறுத்தப்பட்டு காத்திருக்க வேண்டிஉள்ளது.
ரயிலில் உள்ள பயணியர் சரியான நேரத்தில் பயணத்தை தொடர முடியாமல், அவதிப்படுகின்றனர். மாலை நேரத்தில், ரயிலின் இரு புறத்திலும் பூச்சிகள் உள்ளே வந்து பயணியரை தொந்தரவு செய்கின்றன.
எனவே, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க, தென்னக ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.