/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பாக்கத்தில் இடவசதியில்லாததால் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு

ADDED : செப் 22, 2024 02:27 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம் கிராமத்தசை் சுற்றியுள்ள பகுதிகளில், நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதிக நெல் விளைச்சல் உள்ள இப்பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்குகிறது. சம்பா, நவரை பருவகாலம் மட்டுமின்றி, சொர்ணவாரி பட்டத்திற்கும் இப்பகுதியில் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த கொள்முதல் நிலையத்தில், கரும்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் அறுவடையாகும் நெல்லை விவசாயிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இங்குள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், போதிய இடவசதி இல்லை. இதனால், நிலையத்திற்கு வெளியில், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன.
அவை, மழையின் போது நனைந்து பாழாகின்றன. மேலும் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால், அச்சமயங்களில் விவசாயிகள் மிகவும் அவதிபடுகின்றனர்.
இதற்கு தீர்வாக, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
பணம் செலவழித்து, கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல், கொள்முதல் செய்யும் நேரத்தில், மழையில் நனைந்து நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இப்பகுதியில் அறுவடை செய்த நெல் பாதுகாப்பாக வைத்திருந்து விற்பனை செய்ய, நெல் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.