/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விரிவாக்க பணியால் பள்ளூர் வாகன ஓட்டிகள் சிரமம்
/
சாலை விரிவாக்க பணியால் பள்ளூர் வாகன ஓட்டிகள் சிரமம்
சாலை விரிவாக்க பணியால் பள்ளூர் வாகன ஓட்டிகள் சிரமம்
சாலை விரிவாக்க பணியால் பள்ளூர் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : ஜன 06, 2024 11:30 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தார் போடாத சாலை ஓரம், எம்.சாண்ட் கொட்டி, 'பேவர் பிளாக்' கற்களை அடுக்கி சாலை இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்த சாலை விரிவாக்க பணியால், காஞ்சிபுரம் - -அரக்கோணம் சாலை உயரமாகிவிட்டது. இது, பள்ளூர் விருதசீர நதி ஆற்றில் இறக்கத்தில், செல்லும் சாலை பள்ளமாகிவிட்டது.
இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது, சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் இருந்து, பள்ளூர் விருதசீர நதி இறக்கத்தில் சிமென்ட் சாலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்ப சரி செய்யப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.